Thursday, January 25, 2007

'சூரிய நமஸ்கார' சர்ச்சை !

"வந்தே மாதரம்" குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, இப்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில், மத்தியப்பிரதேசத்தின் பிஜேபி அரசு, சூரிய நமஸ்காரம் சார்ந்த தனது கூட்டு யோகா நிகழ்ச்சியை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடத்த உள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவ மாணவிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அவர்கள் சூரிய நமஸ்காரத்தையும், 5 வகையான பிராணாயப் பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.

எல்லா பள்ளிகளிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் (AIMPLB) பல இஸ்லாமிய இயக்கங்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த 'சூரிய நமஸ்கார' நிகழ்ச்சியை தடை செய்ய ஆளுனர் பல்ராம் ஜாக்கரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜமைத் உல்மா ஹிந்த் (JUH), தடை வேண்டி, உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

JUH-ஐ சேர்ந்த ஹாஜி மொஹமத் ஹரூண், "யோகப் பயிற்சிகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதே நேரத்தில், சூரிய நமஸ்காரம் என்ற பெயரில், இந்துக்கள் அல்லாத மாணவ மாணவிகளையும், சுலோகங்களைச் சொல்லி சூரியனை வழிபட வைப்பது, அரசியல் சட்டத்திற்கு புறம்பானது, இஸ்லாமிய மதக் கொள்கைகளுக்கும் எதிரானது" என்று கூறியுள்ளார்.

கிறித்துவர்களும் அரசின் இந்த செயலைக் கண்டித்துள்ளனர். யோகா என்ற பெயரில், அரசு மதவெறியைத் தூண்டுவதாக, மத்தியப்பிரதேச கத்தோலிக ஆலயத்தைச் சேர்ந்த ஆனந்த் முட்டுங்கல் குற்றம் சாட்டியுள்ளார். 'முதலில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது என்று கூறிய அரசு, மாணவ மாணவிகளை நிகழ்ச்சிக்கு அனுப்புமாறு பள்ளிகளை நிர்பந்தப்படுத்துகிறது' என்று மேலும் கூறியுள்ளார் !

இவற்றுக்கிடையே, இஸ்லாமிய மக்கள் தங்கள் பிள்ளைகளை நிகழ்ச்சி அன்று பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று கூறி வருகின்றனர். இன்று நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி, நடந்ததா (எந்த அளவில்) என்பது குறித்து அறிந்தவர் கூறுங்களேன் !

Courtesy: Indian Express

*** 287 ***

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

பல அமெரிக்கர்கள்ள் sun-salute என்ற பெயரில் தினமும் செய்கிறார்கள். சில அமெரிக்க பள்ளிகளிலும் சொல்லித் தருகிறார்கள்.

சிறில் அலெக்ஸ் said...

//சுலோகங்களைச் சொல்லி சூரியனை வழிபட வைப்பது,//

சூரிய நமஸ்காரம் செய்யும்போது சுலோகம் சொல்லவேண்டுமா?


அது ஒரு யோகா பயிற்சியென்றுதான் நான் நினைத்தேன். நான் ஒரு அறைக்குள்தான் (கொஞ்சகாலம்) யோகா பயின்றேன். அங்கே சுலோகமும் இல்லை சூரியனும் இல்லை.

said...

Test Pass !!!

- Sethazal Ravi

enRenRum-anbudan.BALA said...

Test !

enRenRum-anbudan.BALA said...

சிறில், சொக்காயி மற்றும் அனானிஸ்,
வருகைக்கு நன்றி !

said...

What is your opinion on this ?

enRenRum-anbudan.BALA said...

//
What is your opinion on this ?
//
NO COMMENTS :)))

said...

//

//
What is your opinion on this ?
//
NO COMMENTS :)))
//

THANKS ;-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails